மும்பை: சூர்யா நடிப்பில் உருவாக இருந்த ‘கர்ணா’ பான் இந்தியா படம் கைவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆமிர்கான் நடிப்பில் ‘ரங் தே பசந்தி’ படத்தை இயக்கியவர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா. இவர் அடுத்தடுத்து சில வெற்றிப்படங்களை இயக்கினார். இந்நிலையில் ‘கர்ணா’ என்கிற பெயரில் கர்ணண் பற்றிய கதையை புராணப் படமாக இயக்க திட்டமிட்டார். இதில் கர்ணனாக சூர்யா நடிக்க இருந்தார். ஜான்வி கபூர் ஹீரோயினாக நடிக்க தேர்வானார். இதை பான் இந்தியா படமாக இயக்க முடிவு செய்தார். இந்த படம் எப்போது தொடங்கும் என்பது தெரியாது என சமீபத்தில் சூர்யா கூறியிருந்தார். ரூ.600 கோடி பட்ஜெட் என்பதால் இந்த படத்தை தற்போது பட நிறுவனம் கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.