×

நகுல் படத்துக்கு ஆங்கில தலைப்பு ஏன்?

சென்னை: நகுல் போலீஸ் பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தி டார்க் ஹெவன்’. இப்படத்தை பாலாஜி இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே ‘டி3’ படத்தை இயக்கியவர். கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் மீடியா ஃபேக்டரி இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தின் சிறப்பு அறிமுக நிகழ்ச்சியில் இயக்குனர் பாலாஜி பேசும்போது, ‘நகுலைப் பல படங்களில் பார்த்திருக்கிறோம். இதுவரை பார்த்து வந்த நகுல் வேறு. இதில் வேறு மாதிரியாக நகுலைப் பார்ப்பார்கள். இரண்டரை மணி நேரம் ஓடக்கூடிய படத்தையும் நல்ல முறையில் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

இதில் போலீஸ் கதையை வைத்து ஒரு திரில்லராக உருவாக்கி இருக்கிறோம். இந்த திரில்லர் வேறு மாதிரியாக இருக்கும். முதலில் இந்தப் படத்தை எடுக்கலாமா என்று யோசித்தபோது ‘காந்தாரா’ படத்தின் வெற்றி எனக்குப் பெரிதும் நம்பிக்கை அளித்தது. படத்தில் ஆங்கிலத் தலைப்பை வைத்ததைப் பற்றிக் கேட்கிறார்கள். படத்திற்குப் பொருத்தமாக இருப்பதால் தான் அப்படி வைத்தோம்’ என்றார். நகுல் பேசும்போது, ‘காக்கி உடை அணிந்ததும் ஒரு கம்பீரம் வந்தது. இந்த வேடம் எனது கனவு வேடமாகும்’ என்றார்.

 

Tags : Nakul ,Chennai ,Balaji ,Gothai Entertainment ,MS Media Factory ,
× RELATED திரிஷா படத்திலிருந்து ரஹ்மான் திடீர் விலகல்