×

மூச்சு திணறல் பிரச்னையால் சிகரெட்டை நிறுத்திய ஷாருக்கான்

மும்பை: மூச்சு திணறல் பிரச்னையால் புகைப் பிடிப்பதை நிறுத்திவிட்டதாக ஷாருக்கான் தெரிவித்துள்ளார். சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஷாருக்கான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மூச்சுத் திணறல் பிரச்னைக்காக சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், சிகரெட் பிடிப்பதை முழுவதுமாக நிறுத்திவிட்டதாக தெரிவித்துள்ளார். ‘ஒரு சமயத்தில் ஒரு நாளில் 100 சிகரெட் வரை பிடித்துக் கொண்டிருந்தேன். பிறகு எந்த எண்ணிக்கை குறைந்தாலும் சிகரெட் பழக்கத்தை விட முடியாமல் தவித்தேன்.

திடீரென உடல் நலம் பாதித்தபோதுதான் வயதாகிறது என்பதே தெரிகிறது. அதற்கேற்ப மாற வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. இளம் வயதில் தொற்றிக்கொண்ட பழக்கத்தை 59 வயதில்தான் இப்போது விட்டிருக்கிறேன். சுவாசிப்பதில் இப்போது சிரமம் தெரியவில்லை’ என ஷாருக்கான் கூறியிருக்கிறார்.

Tags : Shah Rukh Khan ,Mumbai ,Shahrukh Khan ,
× RELATED முஃபாசாவில் இணைந்த ஷாருக்கான்