×

டிசம்பர் 4ம் தேதி நாக சைதன்யா- சோபிதா துலிபாலா திருமணம்

ஐதராபாத்: நாக சைதன்யா, சோபிதா துலிபாலா திருமணம் டிசம்பர் 4ம் ேததி ஐதராபாத்தில் நடைபெற உள்ளது. சமந்தாவை விவாகரத்து செய்த பிறகு, சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார் நாக சைதன்யா. இந்நிலையில் கடந்த ஆண்டு நடிகை சோபிதா துலிபாலாவுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. அது காதலாக மாறியது. இந்த காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். சோபிதா துலிபாலாவும் ஆந்திராவை சேர்ந்தவர்தான். இவர்களது நிச்சயதார்த்தம் நாகார்ஜுனா வீட்டிலேயே சமீபத்தில் நடைபெற்றது.

இந்நிலையில் ராஜஸ்தானில் இவர்களின் திருமணத்தை நடத்த இருந்தனர். இப்போது திடீரென திருமணம் நடைபெறும் இடம் மாறியுள்ளது. ஐதராபாத்தில் நாகார்ஜுனா குடும்பத்துக்கு சொந்தமான அன்னபூர்ணா ஸ்டுடியோவில் இந்த திருமணம் டிசம்பர் 4ம் ேததி நடத்த முடிவு செய்துள்ளனர்.

Tags : Naga Chaitanya ,Sophitha Thulipala ,Hyderabad ,Sobitha Thulipala ,Samantha ,Sopita Thulipala ,
× RELATED மழலையர் பள்ளி நடத்தும் சமந்தா