×

ஹாலிவுட் நடிகை செலினாவை ஜெய்ராம் சொல்லச் சொல்லி டார்ச்சர் செய்த வாலிபர்: நெட்டிசன்கள் கடும் தாக்கு

மும்பை: செலினா கோம்ஸ் அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற நடிகை. நடிப்பதோடு மட்டுமின்றி இவர் பிரபல பாப் பாடகியும் ஆவார். சமீபத்தில் அமெரிக்காவில் செலினா கோம்ஸுடன் இந்தியர் ஒருவர் எடுத்த செல்பி வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. செலினா கோம்ஸை சந்தித்த இந்தியர் ஒருவர் அவருடன் செல்பி வீடியோ எடுத்துக்கொள்கிறார். அப்போது அந்த நபர் ‘ஜெய் ராம்’ என சொல்லுமாறு கோரிக்கை வைக்கிறார். அப்படி என்றால் என்ன என்றே புரியவில்லை என்பதுபோல் செய்கை செய்கிறார். அதற்கு அந்த வாலிபர் ‘ஜெய் ராம் என்பது இந்தியாவின் சிறந்த முழக்கம்’ என கூறுகிறார். ஆனால் செலினா அப்படி சொல்லவில்லை. தொடர்ந்து அவரை அதுபோல் சொல்ல அந்த வாலிபர் வற்புறுத்துகிறார். அப்போதும் ஜெய் ராம் சொல்லாமல் ‘நன்றி’ சொல்லிவிட்டு செலினா கோம்ஸ் நகர்ந்து விட்டார். அவருக்கு பின்னால் ஓடியபடி ஜெய் ராம் சொல்லுங்கள் என அந்த வாலிபர் சொல்லிக் கொண்டே வருகிறார். செலினா காரில் ஏறி சென்றுவிடுகிறார்.

இந்த வீடியோவை நெட்டிசன் ஒருவர் இன்ஸ்டாகிராம் தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்நிலையில் அந்த வாலிபரின் செயலுக்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வார்த்தையே கேள்விப்படாத ஒருவரிடம் சென்று ஏன் இப்படி கோரிக்கை வைத்து அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்த வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். மதத்திற்கு அவரின் அங்கீகாரத்தை கேட்டு ஏன் இந்தியாவையும், இந்து மதத்தையும் சிறுமைப்படுத்துகிறீர்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் ஜார்கண்ட்டில் ஜெய் ராம் சொல்ல மறுத்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார். ஜெய் ராம் சொல்ல மறுத்தவர்கள் மீது நிறைய தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது..

 

Tags : Hollywood ,Selena ,Jairam ,Mumbai ,Selena Gomez ,America ,Selena Gomez… ,
× RELATED அஜித் படத்துக்கு புதிய சிக்கல்: மெயில்...