அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் வருவாய் துறை செயலாளர் மீது நஞ்சராயன்குளம் பாதுகாப்பு இயக்கத்தினர் மோசடி புகார்

திருப்பூர்:  அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும்  முன்னாள் வருவாய் துறை செயளாளர் அதுல்ய மிஸ்ரா உள்ளிட்டோர் மீது 50 கோடி ரூபாய் மோசடி புகார் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் திருப்பூர் நஞ்சராயன்குளக் கரையில் நீர் வழி பாதையில் உள்ள 50 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தை தனியார் டிரஸ்டுக்கு 1.5 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ததில் ஊழல் நடைப்பெற்றுள்ளதாக நஞ்சராயன்குளம் பாதுகாப்பு இயக்கத்தினர் புகார் அளித்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டள்ள  மனுவில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அப்போதைய வருவாய் துறை செயளாளர் அதுல்ய மிஸ்ரா மற்றும்   திருப்பூர் மாவட்ட ஆட்சியர்களாக  இருந்த கோவிந்தராஜன், விஜயகார்த்திகேயன் ஆகியோர் மீது மோசடி குறித்து விசாரனை நடத்த லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறைக்கு  பரிந்துரைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. நிலத்தை வாங்கிய தனியார் டிரஸ்டு அமைப்பினர் தற்போது நஞ்சராயன்குளக்கரையில் இருந்து  சாலை வரை நீர்வழிப்பாதைகளை மறித்து கட்டுமானப்பணிகளை செய்து வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.எனவே 50 கோடி ருபாய் மதிப்புள்ள நிலத்தை அடிமாட்டு விலைக்கு விற்க்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தி உள்ளன. …

The post அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் வருவாய் துறை செயலாளர் மீது நஞ்சராயன்குளம் பாதுகாப்பு இயக்கத்தினர் மோசடி புகார் appeared first on Dinakaran.

Related Stories: