மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குனரின் அடுத்த படம் அறிவிப்பு

சென்னை: ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தின் இயக்குனர் சிதம்பரம் அடுத்து இயக்க உள்ள படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு பஹத் பாசில் நடித்த ‘ஆவேஷம்’ படத்தின் இயக்குனர் ஜித்து மாதவன் கதை, திரைக்கதை எழுதுகிறார். ஒரே படத்தில் 2 இளம் இயக்குனர்கள் இணைவதால் ரசிகர்களிடையே இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த படத்தில் நடிப்பவர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. வெங்கட் கே நாராயணா சார்பில் கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சைலஜா தேசாய் ஃபென்னின் தெஸ்பியன் பிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. இந்தப் படத்தில் திரைத்துறையில் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களாக உள்ள ஷைஜூ காலெத் ஒளிப்பதிவு, சுஷின் ஷியாம் இசை மற்றும் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்கின்றனர்.

Related Stories: