சென்னை: இயக்குனர் ‘சிந்துநதிப் பூ’ செந்தமிழனின் அடுத்த படம் ‘பிடிவாதம்’. இப்படத்தின் பாடல் பதிவு நடைபெற்றது. பேம்ஸ் மீடியா ஜெய் ராம் சிவா, மாஸ் சினிமாஸ் யோகம் தயாரிக்கின்றனர்
யோகம் எழுதிய கதைக்கு திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி இயக்குகிறார் செந்தமிழன். இவர், கே.டி.குஞ்சுமோன் தயாரித்த சிந்துநதிப் பூ படத்தின் இயக்குனர். இப்படத்தில் ஹீரோ ஹீரோயின் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் பிரபல நடிகர் நடிகைகள் நடிக்கின்றனர்.
தன் இலக்கை நோக்கி ஓடும் ஹீரோ, ஹீரோயினின் பயணம் தான் ‘பிடிவாதம்’ படத்தின் கதை கரு. இது ஒரு ஜாலியான சுவாரஸ்சியமான படம் என்கிறார் செந்தமிழன். ஒளிப்பதிவு, முத்ரா. இசை, விஜய் மந்தாரா. எடிட்டிங், நவீன் குமார். ‘பிடிவாதம்’ படத்தின் படப்பிடிப்பு வடலூரில் நவம்பரில் துவங்கி, ஒரே ஷெட்யூலில் முடிக்க திட்டமிட்டுள்ளனர். அடுத்த ஆண்டு மே மாதம் 1ம் தேதி தொழிலாளர் தினத்தில் இப்படம் ரிலீஸ் ஆகிறது.
The post பாடல் பதிவுடன் தொடங்கியது பிடிவாதம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.