சென்னை: ஸ்டோரிஸ் பை தி ஷோர் சார்பில் அனிருத் வல்லப் தயாரிக்கும் பேண்டஸி எண்டர்டெயினர் படம், ‘ராக்கெட் டிரைவர்’. சமீபத்தில் இப்படத்தின் டிரைலரை வெளியிட்டு, படக்குழுவினருக்கு சிம்பு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆட்டோ டிரைவரைப் பற்றிய கதையுடன் இப்படம் உருவாகியுள்ளது. முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமை ரோல் மாடலாக நினைக்கும் ஆட்டோ டிரைவர், தன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றம் காரணமாக இளம் வயது அப்துல் கலாமைச் சந்திக்கிறார். அப்போது ஏற்படுகின்ற சம்பவங்களை கலகலப்பாகவும், பொழுதுபோக்காகவும், ஜனரஞ்சகமாகவும் படம் சொல்கிறது.
இதில் டிராபிக் போலீஸ் வேடத்தில் சுனைனா நடிக்கிறார். அவர் ஏற்றிருப்பது கவுரவ வேடம். ‘கே.டி’ என்ற படத்துக்காக தேசிய விருது பெற்ற நாகவிஷால், விஸ்வத், காத்தாடி ராமமூர்த்தி, ஜெகன் நடித்துள்ளனர். ரெஜிமெல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்ய, கவுசிக் கிரிஷ் இசை அமைத்துள்ளார். இனியவன் பாண்டியன் எடிட்டிங் செய்ய, பிரேம் கருந்தமலை அரங்குகள் அமைத்துள்ளார். அக்ஷய் பூல்லா, பிரசாந்த்.எஸ், ஸ்ரீராம் ஆனந்தசங்கர் இணைந்து கதை எழுதியுள்ளனர். ஸ்ரீராம் ஆனந்தசங்கர் இயக்கியுள்ளார்.
The post ராக்கெட் டிரைவர் படத்தில் டிராபிக் போலீஸ் வேடத்தில் சுனைனா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.