சோழவந்தானில் சித்திரை திருவிழா பூப்பல்லக்கு

சோழவந்தான்: சோழவந்தானில் ஜெனக நாராயணப் பெருமாள் கோயில் சித்திரை திருவிழா பூப்பல்லக்கு உற்சவத்துடன் நிறைவடைந்தது. இவ்விழாவில் 19ம் தேதி பெருமாள், அழகர் கோலத்தில் வெண்குதிரையில் பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் 20ம் தேதி இரட்டை அக்ரஹாரம் கிருஷ்ணன் கோயில் முன் யாதவர் சங்கம் சார்பில் தசாவதாரம் நடந்தது. நிகழ்ச்சியின் நிறைவாக, நேற்று முன்தினம் இரவு முதலியார் கோட்டையில், சுவாமி பூப்பல்லக்கில் எழுந்தருளினார்.விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சுசிலாராணி,கணக்கர் பூபதி, ரகுராம்பட்டர், பணியாளர்கள் வசந்த், மருதுபாண்டி, முருகன் மற்றும் முதலியார் கோட்டை கிராமத்தினர் செய்திருந்தனர்.

Advertising
Advertising

Related Stories: