‘தியேட்டருக்கு போக வேண்டாம் என எச்சரித்தும் கேட்கவில்லை’ அல்லு அர்ஜுன் ஜாமீனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் செல்கிறது போலீஸ்

திருமலை: நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த ‘புஷ்பா 2’ திரைப்படம் கடந்த 5ம் தேதி வெளியானது. இதற்கு ஒரு நாள் முன்னதாக (4ம் தேதி), ஐதராபாத் ஆர்டிசி கிராஸ் ரோட்டில் உள்ள தியேட்டரில் பிரிமியர் ஷோவை பார்க்க அல்லு அர்ஜூன் சென்றார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி, தனது குடும்பத்தினருடன் வந்திருந்த ரேவதி என்ற பெண் பலியானார். அவரது மகன் தேஜா 12 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். இந்நிலையில், நேற்று அவர் மூளைச்சாவு அடைந்தார். இந்த சம்பவத்தில் 11வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நடிகர் அல்லு அர்ஜூனை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். இதற்கிடையில் உயர்நீதிமன்றம் 4 வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியதால் ஒரு நாள் முழுவதும் சிறையில் இருந்த அல்லுஅர்ஜூன் வெளியே வந்தார்.

இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 4ம் தேதி புஷ்பா 2 படத்தின் பிரீமியர் ஷோவின்போது, ​​ஹீரோ, ஹீரோயின் வருவார்கள் என்று தியேட்டர் உரிமையாளர், போலீசாரிடம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியிருந்தனர். ஆனால் அவர்கள் வந்தால் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே அவர்கள் வர வேண்டாம் என்று தியேட்டர் உரிமையாளருக்கு பதிலளிக்கப்பட்டது. போலீஸ் எச்சரிக்கையை மீறி அல்லு அர்ஜுனும் தியேட்டர் உரிமையாளரும் நடந்து கொண்டதாகவும், அல்லு அர்ஜூன் பேரணியாக வந்ததாகவும், இதனால் கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் இறந்துள்ளார். அவரது மகன் தேஜ் நேற்று மூளைச்சாவு அடைந்தார். எனவே அல்லுஅர்ஜூனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையிட உள்ளோம்.

Related Stories: