என்னையும் ட்ரோல் செய்தார்கள்: விஜய் சேதுபதி

சென்னை: ‘விடுதலை 2’ படத்தின் புரமோஷனுக்காக விஜய் சேதுபதி தெலுங்கு ஊடகத்திற்கு பேட்டி கொடுத்தார். அதில் தொகுப்பாளர், தெலுங்கில் ‘கங்குவா’ படமும் ‘தி கோட்’ படமும் தோல்வியடைந்ததாக சொல்லி ஒரு கேள்வியை முன்வைத்தார். அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, “நான் புரொமோஷனுக்காக வந்திருக்கிறேன். மற்ற படங்கள் குறித்து நான் ஏன் பேச வேண்டும். அதற்கு நான் முன்பே பதிலும் சொல்லிவிட்டேன். எனக்கும் அது நடந்து இருக்கிறது. என்னையும் மக்கள் ட்ரோல் செய்தார்கள். தோல்வி வந்தால் அது பொதுவாக நடப்பதுதான். எல்லாரும் வெற்றியடைய வேண்டும் என்பதற்காகத் தான் படம் எடுக்கிறோம். படம் வெளியாவதற்கு முன்பு மக்களிடம் காண்பித்து அவர்களின் கருத்துகளை கேட்டறிவோம். என்னுடைய தோல்வி படங்களைக் கூட மக்களுக்கு போட்டுக் காட்டி கருத்துகளை கேட்டிருக்கிறோம். எல்லோரும் அதை செய்ய வேண்டும்” என்றார்.

Related Stories: