சாமானியன் ஓடும் தியேட்டரில் கட்டணம் குறைத்த ராமராஜன்

சென்னை: ‘சாமானியன்’ படம் 100 நாள் கடந்து ஓடிய தியேட்டரில் தியேட்டர் கட்டணத்தை குறைக்க ராமராஜன் நடவடிக்கை எடுத்தார். ராமராஜன் நடித்து வெளியான ‘சாமானியன்’ படத்தின் 116வது நாள் விழா ஆலங்குளம் டிபிவி திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு ராமராஜன் சென்ற போது அங்கு வந்த தாய்மார்கள், பெரியோர்கள் எண்ணத்தை பிரதிபலிக்கும் விதமாக தியேட்டர் உரிமையாளர்களிடம் ராமராஜன் ஒரு கோரிக்கை வைத்தார்.

அதாவது நல்ல படங்கள் தியேட்டர்களில் ஓட வேண்டுமென்றால் டிக்கெட் விலையும் குறைக்க வேண்டும் என்றார். அதை தியேட்டர் உரிமையாளர்கள் டிபிவி கருணாகரராஜா, டிபிவி வைகுண்டராஜா ஏற்று நல்ல கருத்துக்களை கொண்ட ‘சாமானியன்’ படம் அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் டிக்கெட் விலையை ₹120லிருந்து ₹50 க்கு அனுமதித்தனர்.

மேலும் இங்கு 4 ஷோவில் தொடங்கிய இப்படம் இப்போது 2 ஷோக்களாக நடந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்துக்கு பிறகு 100 நாள் ஓடிய படமாகவும் இது அமைந்திருக்கிறது. ராமராஜன் கூறும்போது, ‘சாமானியன் படத்தில் நல்ல கருத்துகளை கூறி இருந்தேன். அதற்கு கிடைத்த வெற்றிதான் இது. தொடர்ந்து இதுபோல் கருத்துள்ள படங்களில் நடித்து மக்களை மகிழ்விப்பேன்’ என்றார்.

Related Stories: