பொங்கல் ரேஸில் இருந்து விலகியது விடாமுயற்சி

சென்னை: அஜித்குமாரின் ‘விடா முயற்சி’ படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகாது என லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்படத்துக்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் இன்னும் முடியவில்லை. இறுதிகட்ட பணிகள் முடிக்க நேரம் தேவைப்படுவதால் திட்டமிட்டபடி ‘விடா முயற்சி’ பொங்கலுக்கு வெளிவராது என்பது உறுதியாகியுள்ளது. தவிர்க்க முடியாத காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக லைகா புரொடக்‌ஷன்ஸ் தெரிவித்துள்ளது. இதனால் இப்போதைக்கு பொங்கலுக்கு பாலாவின் ‘வணங்கான்’, ஷங்கர் இயக்கியுள்ள ‘கேம் சேஞ்சர்’ ஆகிய படங்கள் மட்டுமே திரைக்கு வரும். மேலும் ஏதாவது ஒரு படம் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

Related Stories: