சென்னை: எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் சார்பில் சிராஜ்.எஸ் தயாரிப்பில் போஸ் வெங்கட் இயக்கத்தில், விமல் நடித்துள்ள படம் ‘சார்’. இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி பேசும்போது, ‘கூத்துப்பட்டறை காலத்திலிருந்தே, நான் விமலின் ரசிகன், அப்போது அவர் நடிப்பதை ரசித்துப் பார்ப்பேன். இந்தப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும், போஸ் வெங்கட்டை டீவி சீரியல் நடிக்கும் காலத்திலிருந்து தெரியும்.
அவர் அப்போது ஆட்டோ ஓட்டிக்கொண்டே நடித்துக்கொண்டிருந்தார், அதிலேயே தங்கி விடாமல், சினிமாவுக்கு வந்து, இப்போது இயக்கம் என தன்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக்கொண்டே செல்கிறார். படத்தை முழுதாக பார்த்து விட்டேன். கடைசி 40 நிமிடம் படம் உங்களை உலுக்கி விடும்’ என்றார். இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் நிறுவனம் இப்படத்தை வழங்குகிறது. ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் ‘கோட்’ படத்திற்குப் பிறகு சார் படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது. விமல், வெற்றிமாறன், தனஞ்செயன், போஸ் வெங்கட், டி.சிவா, இசையமைப்பாளர் சித்துகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
The post 40 கடைசி நிமிடம் உலுக்கி விடும் சார் பற்றி விஜய் சேதுபதி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.