திருத்தணி புதிய ஆர்.டி.ஓ. பொறுப்பேற்பு

திருத்தணி:  திருத்தணி வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிந்து வந்த ம.சத்யா, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இதையடுத்து, திருத்தணி வருவாய் கோட்டாட்சியராக ஹசத்பேகம் நியமிக்கப்பட்டார். இவர், நேற்று மதியம் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் சங்கரன் கோவில் வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிந்து தற்போது திருத்தணிக்கு பணியிட மாற்றம் பெற்றுவந்தார். புதியதாக கோட்டாட்சியராக பொறுப்பேற்ற ஹசத்பேகத்திற்கு ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் கதிர்வேலு, தாசில்தார்கள் வெண்ணிலா, மணிவாசகம், தமயேந்தி, சரவணன், துணை தாசில்தார்கள் முரளி, ரீட்டா, தமிழ்செல்வி, சாமுண்டீஸ்வரி, வருவாய் ஆய்வாளர்கள் ஜெய்சங்கர், முகமது யாசர் அரபாத், ஸ்டீபன்ராஜ், சீனத்சாபிரா, நதியா உள்பட வருவாய் துறை அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து புதிய கோட்டாட்சியர் ஹசத்பேகம், மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து வாழ்த்துபெற்றார்….

The post திருத்தணி புதிய ஆர்.டி.ஓ. பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Related Stories: