விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் நித்யா மேனன்

சென்னை: விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்க உள்ளார். பாண்டிராஜ் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இதில் கதாநாயகியாக நித்யா மேனன் தேர்வாகியுள்ளார். கதைக்கு முக்கியத்துவம் கொண்ட, அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் இப்படம் உருவாகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் டி.ஜி. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் இப்படம் உருவாகிறது.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் நித்யா மேனன் விரைவில் பங்கேற்கிறார். இந்த படத்தின் பெயர், இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகிறது.

The post விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் நித்யா மேனன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: