யூடியூப்பில் அரசுக்கு எதிரான காட்சிகள் மூஸ்சேவின் கடைசி பாடல் நீக்கம்

புதுடெல்லி: அரசுக்கு எதிரான காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மூசே வாலா பாடிய கடைசி பாடலின் வீடியோ யூடியூப்பில் இருந்து நீக்கப்பட்டது. பஞ்சாப்பை சேர்ந்த பிரபல பாடகர் சித்து மூஸ்சேவாலா கடந்த மே 29ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் பிறகு, எஸ்ஒய்எல் என பெயரிடப்பட்ட அவருடைய கடைசி வீடியோ பாடல் கடந்த வியாழக்கிழமை யூடியூப்பில் வெளியானது. இந்த பாடல் நீண்ட காலமாக பஞ்சாப், அரியானா மாநிலங்களில் இழுபறியாக இருக்கும் சட்லெஜ்-யமுனா நதிகள் இணைப்பு பற்றியதாகும். கடந்த 3 நாட்களிலேயே 2.7 கோடி பார்வையாளர்கள், 33 லட்சம் லைக்குகளை இந்த பாடல் அள்ளியது. இந்நிலையில், இந்த பாடலில் ஒருங்கிணைந்த பஞ்சாப், 1984ம் ஆண்டு சீக்கியர் கலவரம், விவசாயிகள் போராட்டத்தின் போது செங்கோட்டையில் சீக்கிய கொடி ஏற்றியது என அரசுக்கு எதிரான காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக ஒன்றிய அரசு புகார் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, மூஸ்சேவாலாவின் இந்த கடைசி பாடல், யூடியூப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. …

The post யூடியூப்பில் அரசுக்கு எதிரான காட்சிகள் மூஸ்சேவின் கடைசி பாடல் நீக்கம் appeared first on Dinakaran.

Related Stories: