மீண்டும் திரைக்கு வருகிறது டைட்டானிக்

சென்னை: கடந்த 1997ல் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உலகம் முழுவதும் வெவ்வேறு மாதம் மற்றும் தேதியில் வெளியான படம், ‘டைட்டானிக்’. கடந்த 1912ல் அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிய டைட்டானிக் என்ற சொகுசு கப்பலில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவான இப்படம், 11 ஆஸ்கர் விருதுகளை வென்றது. மேலும், உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடி வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது. இதில் நடித்த லியோனார்டோ டிகாப்ரியோ, கேட் வின்ஸ்லெட் ஆகியோர் முன்னணி நடி கர், நடிகையாக மாறினர். இருவரும் வெவ்வேறு படங்களுக்காக ஆஸ்கர் விருது வென்றனர். ரஸ்ஸல் கார்பெண்டர் ஒளிப்பதிவு செய்ய, ஜேம்ஸ் ராய் கோர்னர் இசை அமைத்திருந்த ‘டைட்டானிக்’ படம், தற்போது அதிநவீன தொழில்நுட்பங்களுடன் மெருகேற்றப்பட்டுள்ளது. இப்படம் வெளியாகி 25 வருடங்கள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில், இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தில், புதுப்பிக்கப்பட்ட ‘டைட்டானிக்’ படம்  உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது….

The post மீண்டும் திரைக்கு வருகிறது டைட்டானிக் appeared first on Dinakaran.

Related Stories: