உலக போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி, மனித சங்கிலி-திருப்பதியில் எஸ்பி தலைமையில் நடந்தது

திருப்பதி : உலக போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி, மனித சங்கிலி நேற்று நடந்தது.திருப்பதியில் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, காவல் துறை மற்றும் அமலாக்கப் பிரிவு சார்பில் திருப்பதி ஏர் பைபாஸ் சாலையில் உள்ள அன்னமய்யா ஜங்ஷன் முதல் எம்ஆர் பள்ளி ஜங்ஷன் வரை விழிப்புணர்வுப் பேரணி, மனிதச் சங்கிலி நடைபெற்றது. விழிப்புணர்வு பேரணியை மாவட்ட எஸ்பி ஸ்ரீ.பி. பரமேஸ்வர ரெட்டி, கூடுதல் எஸ்பி சுப்ரஜா, அமலாக்கத்துறை கண்காணிப்பாளர் எஸ்.பி.சுவாதி ஆகியோர் கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தனர். அப்போது பேசிய திருப்பதி எஸ்பி பரமேஸ்வரர் ரெட்டி இளைஞர்கள் நாட்டின் உயிர்நாடி இவர்கள் எதிர்கால இந்தியாவை வழிநடத்த கூடியவர்கள்போதைப்பொருளில் இருந்து அனைவரும் விலகி இருக்க வேண்டும்.தாய்மார்கள் மற்றும் தந்தைகள் தங்கள் குழந்தைகளின் நடத்தையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும், இதனால் அவர்கள் சரியான பாதையில் செல்ல முடியும் வாழ்க்கை சீராக அமையும் சமூகத்தில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மக்கள், மாணவர்கள், பெற்றோர்கள் போதைப்பொருளை எதிர்க்க வேண்டும். முதன்மையாக மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகாமல் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.இந்நிகழ்ச்சியில் காவல்துறை, எஸ்.இ.பி., அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்….

The post உலக போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி, மனித சங்கிலி-திருப்பதியில் எஸ்பி தலைமையில் நடந்தது appeared first on Dinakaran.

Related Stories: