தீய எண்ணங்களை உள்ளத்திற்குள் புகுத்தாதீர்கள்!

கிறிஸ்துவம் காட்டும் பாதை

Advertising
Advertising

‘‘பரிசேயரும் மறைநூல் அறிஞரும் இயேசுவிடம் வந்து, ‘‘உம் சீடர் மூதாதையரின் மரணம் மீறுவது ஏன்? உணவு அருந்துமுன் அவர்கள் தங்கள் கைகளைக் கழுவுவதில்லையே?’’ என்றனர். இயேசு அவர்களிடம், நீங்கள் உங்கள் மரபின் பொருட்டுக் கடவுளின் கட்டளையை மீறுவது ஏன்? கடவுள், ‘‘உன் தந்தையையும் தாயையும் மதித்து நட’’ என்றும், தந்தையையோ, தாயையோ சபிப்போர் கொல்லப்பட வேண்டும் என்றும் உரைத்திருக்கிறார். ஆனால் நீங்கள் எவராவது தம் தாயையோ, தந்தையையோ பார்த்து, ‘‘உமக்கு நான் கடமைப்பட்டிருக்கிறது கடவுளுக்குக் காணிக்கையாயிற்று’’ என்றால் அவர் தம் தந்தையை மதிக்க வேண்டியதில்லை என்று சொல்லுகிறீர்கள். இவ்வாறு உங்கள் மரபின் பொருட்டுக் கடவுளின் வார்த்தையைப் பயனற்றதாக்கி விடுகிறீர்கள். வெளிவேடக்காரரே! உங்களைப்பற்றிப் பொருத்தமாகவே ஏசாயா இறைவாக்கு உரைத்திருக்கிறார்; அவர், ‘‘இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர். இவர்கள் உள்ளமோ என்னை விட்டு வெகு தொலைவில் இருக்கிறது. மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர். இவர்கள் என்னை வழிபடுவது வீண் என்கிறார்’’ என்றார்.

மேலும் இயேசு மக்கள் கூட்டத்தைத் தம்மிடம் வரவழைத்து அவர் அவர்களை நோக்கி ‘‘நான் சொல்வதைக் கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள். வாய்க்குள் செல்வது மனிதரைத் தீட்டுப்படுத்தாது. மாறாக, வாயிலிருந்து வெளிவருவதே மனிதரைத் தீட்டுப்படுத்தும்’’ என்றார். பின்பு சீடர் அவரை அணுகி, பரிசேயர் உம் வார்த்தையைக் கேட்டு மனவேதனை அடைந்தனர் என்பது உமக்குத் தெரியுமா? என்றனர். இயேசு மறுமொழியாக, ‘‘என் விண்ணகத் தந்தை நடாத எந்த நாற்றும் வேரோடு பிடுங்கப்படும். அவர்களை விட்டு விடுங்கள். அவர்கள் குருட்டு வழிகாட்டிகள். பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவரை வழிநடத்தினால் இருவரும் குழியில் விழுவர்’’ என்றார். அதற்குப் பேதுரு அவரை நோக்கி, ‘‘நீர் சொன்ன உவமையை எங்களுக்கு விளக்கும் என்று கேட்டார். இயேசு அவரிடம், உங்களுக்கு இன்னுமா புரியவில்லை? வாயினுள் செல்வது அனைத்தும் வயிற்றினூடே சென்று கழிப்பிடத்தில் வெளியேற்றப்படும் எனத் தெரியாதா? வாயினின்று வெளி வருபவை உள்ளத்திலிருந்து வருகின்றன.

அவையே மனிதரைத் தீட்டுப்படுத்துகின்றன. ஏனெனில் கொலை, விபச்சாரம், பரத்தைமை, களவு, பொய்ச்சான்று, பழிப்புரை ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் உள்ளத்திலிருந்து வெளிவருகின்றன. இவையே மனிதரைத் தீட்டுப்படுத்துகின்றன. கைகழுவாமல் உண்ணுவது மனிதரைத் தீட்டுப்படுத்தாது என்றார்.’’ - (மத்தேயு 15: 1-20)மனதை உருவாக்குவது எண்ணங்கள்தான். எண்ணங்கள் அனைத்தையும் அழித்துவிட்டால் மனம் என்று சொல்லப்படும் ஒன்று இருக்காது. எண்ணம்தான் வேதனை; அது இல்லையெனில் பரமானந்தம் அடையலாம். இந்த வாழ்க்கையில் எந்த எண்ணம் உங்களிடத்தில் வலுவாக இருக்கிறதோ அது உங்களின் அடுத்த பிறவியில் உங்களை இயல்பாக ஆக்கி விடுகிறது. எண்ணங்கள் ஆகாயவெளியில் அதிர்வுகளாக உள்ளன. வேறுபாடுகள் மற்றும் விருப்பு வெறுப்புகளிலிருந்து மனத்தை விடுவித்துக் கொண்டிருப்பவர்கள் நிலையான பேரானந்தத்தை அனுபவிக்கிறார்கள்.பொருட்கள் விரும்பும்போது சுகமளிப்பவையாகவும், விரும்பாதபோது கசப்பானவையாகவும் இருக்கின்றன. ஆகவே சுகத்துக்குக் காரணமாக ஆசை இருக்கிறது. ஆசை எப்போதும் ஒரு உருவத்துடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. சிந்திக்காதபோது மனம் உண்மை என்று தோன்றுகிறது. சிந்திக்கும்போது அது விண்ணில் காற்றாகக் கரைந்துவிடுகிறது.

- ‘‘மணவைப்பிரியன்’’

ஜெயதாஸ் பெர்னாண்டோ

Related Stories: