ஆழ்துளை கிணற்றில் விழுந்து மீட்கப்பட்ட சிறுவனுக்கு ஆறுதல் கூறிய முதல்வர்

ஜாஞ்கிர்: சட்டீஸ்கரின் ஜாஞ்கிர்-சம்பா மாவட்டத்தில் உள்ள பிக்ரிட் கிராமத்தில் கடந்த 10ம் தேதி பிற்பகலில், தனது வீட்டின் பின்புறம் விளையாடி கொண்டிருந்த ராகுல் சாஹூ (11) என்ற சிறுவன் எதிர்பாராதவிதமாக அங்கிருந்த 60 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். இதையடுத்து, சிறுவனை மீட்கும் முயற்சிகள் தொடங்கின. தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.ஆழ்துளை குழாய் அருகிலேயே  இணை பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர், ஆழ்துளை குழாய் கிணற்றுக்குள் செல்ல சுரங்க வழி உருவாக்கப்பட்டது. 5 நாட்களாக நடந்த தீவிர முயற்சிக்கு பின் நேற்று முன்தினம் இரவு சிறுவன் மீட்கப்பட்டு, பிலாஸ்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். சிறுவனை பாக்டீரியா தாக்கி, உடலில் ரத்தம் முழுவதும் பரவியுள்ளது. இதனால், அவன் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.இந்நிலையில், அந்த சிறுவனை முதல்வர் பூபேஷ் நேரில் பார்த்தார். பின்னர் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்….

The post ஆழ்துளை கிணற்றில் விழுந்து மீட்கப்பட்ட சிறுவனுக்கு ஆறுதல் கூறிய முதல்வர் appeared first on Dinakaran.

Related Stories: