நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்க கோரிக்கை

திருப்போரூர்: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்ட 4வது மாநாடு திருப்போரூரில் 2 நாட்கள் நடைபெற்றது. மாவட்ட தலைவர் தாட்சாயிணி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் அன்பு கொடியேற்றினார். மாநில தலைவர் ஜான்சிராணி, மாநில பொதுச்செயலாளர் நம்பிராஜன், திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி, மா.கம்யூ. மாவட்ட செயலாளர் பாரதி அண்ணா, திருப்போரூர் ஒன்றிய செயலாளர் செல்வம், மாநில செயலாளர் ஜீவா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேசினர்.மாநாட்டில், குளிர்சாதன பேருந்துகளைத்தவிர அனைத்து பேருந்துகளிலும் மாற்றுத்திறனாளிகள் இலவசமாக பயணிக்க அரசு ஆணை இருந்தும் அதை முழுவதுமாக செயல்படுத்த மறுக்கப்படுகிறது. இந்த ஆணையை முழுமையாக செயல்படுத்தவேண்டும். திருப்போரூர், திருக்கழுக்குன்றம் ஆகிய 2 வட்டங்களை தனி வருவாய் கோட்டமாக அறிவிக்கவேண்டும். அனைத்து அரசு கட்டிடங்களிலும் மாற்றுத்திறனாளிகள் சென்று வரும் வகையில் சாய்வு தளம் அமைக்கவேண்டும். நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தில் பேரூராட்சி, நகராட்சிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலை வழங்கவேண்டும். அறநிலையத்துறை கோயில்களில் மாற்றுத்திறனாளிகள் தடையின்றி சாமி தரிசனம் செய்யும் வகையில் தனிவழி ஏற்படுத்தி தரவேண்டும். அனைத்து பேருந்து நிலையங்களிலும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் கழிப்பறைகள் அமைக்கவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன….

The post நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: