எஸ்ஏ. கலை, அறிவியல் கல்லூரி சார்பில் ஐந்து கிராமங்கள் தத்தெடுப்பு

திருவள்ளூர்: ஒன்றிய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் உன்னத் பாரத் அபியான் திட்டத்தினை கிராமங்களில் செயல்படுத்த துணை செய்யும் கல்வி நிறுவனமாக திருவேற்காடு எஸ்.ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்றிய அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, கல்வி நிறுவனங்களின் வழியாக கிராமங்களை தத்தெடுத்து அங்கு நல்ல தரமான வாழ்க்கை வசதியை மேம்படுத்துவதற்காகவும் கிராமப்புற வளங்களை மக்கள் பயன்பாட்டிற்காக பயிற்சி கொடுத்து இந்திய கிராமங்களை மேம்படுத்துவதற்காகவும் கிராமங்களைத் தத்தெடுத்துப் பணியாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இதன்படி, திருவேற்காடு எஸ்.ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஊரக வளர்ச்சி முகமை மாவட்ட திட்ட இயக்குனர் வை.ஜெயக்குமார் ஆகியோர் வழிகாட்டுதலின் படி பூந்தமல்லி வட்டாரத்தில் உள்ள மேட்டுப்பாளையம், பானவேடு, அருணாச்சல நகர், கண்ணம்பாளையம், மேல்பாக்கம் ஆகிய 5 கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டுள்ளன. கிராமப்புற வளர்ச்சிக்காக சேவையாற்றும் எண்ணங்களை மாணவர்களிடையே விதைத்து கிராமப்புற மக்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்காக அரசின் திட்டங்களை எடுத்துக்கூறிக் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே இதன் நோக்கமாகும்….

The post எஸ்ஏ. கலை, அறிவியல் கல்லூரி சார்பில் ஐந்து கிராமங்கள் தத்தெடுப்பு appeared first on Dinakaran.

Related Stories: