அஜித் படம் ரீ-ரிலீஸ்

கடந்த 1980ல் ஆர்.கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் ரஜினிகாந்த், பிரியா நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம் ‘பில்லா’. எம்.எஸ்.விஸ்வ நாதன் இசை அமைத்திருந்தார். இப்படத்தை இயக்குனர் விஷ்ணுவர்தன் ரீமேக் செய்திருந்தார். இது கடந்த 2007ல் திரைக்கு வந்தது. அப்போது ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற இப்படம், வரும் மே மாதம் 1ம் தேதி, அஜித் குமாரின் 53வது பிறந்தநாளையொட்டி ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. ஜிபி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் அரவிந்த் சுரேஷ் குமார், டாக்டர் ஞானபாரதி ஆகியோர், ஏடிஎம் புரொடக்‌ஷன்ஸ் மூலம் தமிழ்நாட்டில் மட்டும் 150 தியேட்டர்களில் வெளியிடுகின்றனர்.

விஷ்ணுவர்தனின் ஸ்டைலான மேக்கிங்கில் இரட்டை வேடத்தில் அஜித் குமார், ஹீரோயினாக நயன்தாரா நடித்திருந்தனர். முக்கிய வேடங்களில் பிரபு, ரஹ்மான், நமீதா, சந்தானம் நடித்திருந்தனர். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். தற்போது விஜய்யின் ‘கில்லி’ படம் 20 வருடங்களுக்குப் பிறகு ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வெற்றிபெற்ற நிலையில், அஜித் குமாரின் படமும் ரீ-ரிலீஸ் செய்யப்படுவது குறித்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

The post அஜித் படம் ரீ-ரிலீஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: