இந்தியா கூட்டணியால்தான் பாதுகாப்பான சூழல் உருவாகும்: ‘ஜெய் பீம்’ இயக்குனர் த.செ.ஞானவேல் டிவிட்

சென்னை: சூர்யா, பார்வதி, மணிகண்டன் நடித்த ஜெய் பீம் படத்தை இயக்கியவர் த.செ.ஞானவேல். இப்போது ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், ராணா, பஹத் பாசில் நடிப்பில் வேட்டையன் படத்தை இயக்கி வருகிறார். மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்கும்படி அவர் ரசிகர்களையும் பொதுமக்களையும் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து டிவிட்டரில் அவர் கூறியிருப்பது: வருங்கால தலைமுறையினருக்கு வெறுப்பு நிலவாத, சக இந்தியர்களின் தனித்துவத்தை மதிக்கிற பாதுகாப்பான சூழலை அமைத்து தருவது நமது தார்மீக கடமை.

இந்தியா கூட்டணி கட்சிகளின் வாக்குறுதிகள் சமூக நல்லிணக்கத்தையும், சமூக நீதியையும் காப்பாற்றும் என்கிற நம்பிக்கை அளிக்கின்றன. மாநில உரிமை, மொழி உரிமை, கருத்து உரிமை, கல்வி உரிமை போன்ற அடிப்படை உரிமைகளை மீட்டெடுப்பதும், காத்துக் கொள்வதும் அவசியம். அதன் அடிப்படையில் தி.மு.க, காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளடக்கிய இந்தியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி நானறிந்த, என்னை அறிந்த அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.

The post இந்தியா கூட்டணியால்தான் பாதுகாப்பான சூழல் உருவாகும்: ‘ஜெய் பீம்’ இயக்குனர் த.செ.ஞானவேல் டிவிட் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: