தாளவாடி மலைப்பகுதியில் பசுமாட்டை வேட்டையாடிய புலி

சத்தியமங்கலம் : தாளவாடி அருகே உள்ள சேஷன் நகர் பகுதியை சேர்ந்தவர் நாகமணி (40). இவர் தனது விவசாய தோட்டத்தில் நான்கு பசு மாடுகளை வளர்த்து வருகிறார்.நேற்று காலை வழக்கம்போல் தனது மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்ற நாகமணி காலை 11:30 மணி அளவில் தண்ணீர் குடிக்க தோட்டத்திற்கு சென்று போது, மாடுகள் கத்தியபடி தலைதெறிக்க ஓடியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மாடுகள் இருந்த பகுதிக்கு வந்து பார்த்தபோது ஒரு புலி மாட்டின் கழுத்தை கடித்து ரத்தத்தை குடித்துக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரை கண்ட புலி பசு மாட்டை விட்டு விட்டு அருகே உள்ள புதர் காட்டிற்குள் சென்று மறைந்தது. புலி தாக்கிய பசு மாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததால் அப்பகுதி விவசாயிகள் உடனடியாக தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தாளவாடி வனச்சரக அலுவலர் சதீஷ் தலைமையிலான வனத்துறை ஊழியர்கள் கால் தடத்தை ஆய்வு செய்து புலி நடமாட்டத்தை உறுதி செய்தனர். இதையடுத்து வனத்துறையினர் புலி நடமாட்டத்தை கண்காணிக்க தானியங்கி கேமராக்கள் பொருத்தப்படும். மேலும் தனியார் பட்டா நிலத்தில் மரம், செடி கொடிகள் முளைத்து உள்ளதால் நில உரிமையாளருக்கு தகவல் தெரிவித்து சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். மேலும் புலி தாக்கி இறந்த பசுமாட்டிற்கு உரிய அரசு நிவாரணம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தனர்….

The post தாளவாடி மலைப்பகுதியில் பசுமாட்டை வேட்டையாடிய புலி appeared first on Dinakaran.

Related Stories: