சென்னை: அபர்னதி, ‘சேத்துமான்’ அஸ்வின், கபாலி, ‘பரியேறும் பெருமாள்’ லிங்கேஷ், சுரேஷ் மேனன் நடித்துள்ள படம், ‘நாற்கரப்போர்’. இயக்குனர்கள் ஹெச்.வினோத், ராஜபாண்டி ஆகியோரின் உதவியாளர் ஸ்ரீவெற்றி இயக்கியுள்ளார். வி6 பிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.வேலாயுதம் தயாரித்துள்ளார். மலையாள இயக்குனர் மேஜர் ரவியின் மகன் அர்ஜூன் ரவி மற்றும் ஞானசேகரன் தமிழில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகின்றனர்.
இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுடன் இணைந்து பணியாற்றிய தினேஷ் ஆண்டனி இசை அமைத்துள்ளார். குகை மா.புகழேந்தி பாடல்கள் எழுதியுள்ளார். படம் குறித்து ஸ்ரீவெற்றி கூறியதாவது: தூய்மைப்பணி செய்யும் சமுதாயத்தில் இருந்து வந்த ஒருவன் எப்படி ‘கிராண்ட் மாஸ்டர்’ ஆகிறான்? அதற்காக அவன் சந்திக்கும் அரசியல் ரீதியான, சாதி ரீதியான பிரச்னைகள் என்ன என்பதை சொல்லும் ஸ்போர்ட்ஸ் டிராமாவாக படம் உருவாகியுள்ளது.
The post சதுரங்க விளையாட்டு படம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.