ஆவணி அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்தக் கடலில் பக்தர்கள் புனித நீராடல்

ராமேஸ்வரம்: ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, சுவாமி தரிசனம் செய்தனர். ஆவணி மாத அமாவாசை நாளான நேற்று ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் அதிகாலை 5 மணி முதல் குவிந்தனர். பக்தர்கள் தீர்த்தக் கடலில் புனித நீராடி, தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட்டனர். பின்னர் கோயிலுக்குள் 22 தீர்த்தங்களிலும் நீராடி ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.

Advertising
Advertising

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், பக்தர்கள் வருகை வழக்கத்தைவிட கூடுதலாக இருந்தது. இதனால் கோயிலுக்குள் தீர்த்தமாடும் பகுதியிலும், சுவாமி சன்னதியிலும் பக்தர்கள் நெருக்கடி அதிகமாக இருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் வெளியூர்களில் இருந்து ஏராளமான வாகனங்களில் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் ராமேஸ்வரம் வந்ததால் நகர் முழுவதும் சாலையின் ஓரங்களில் வாகனங்கள் நிறுத்தப்பட்டது.

 

இதனால் ராமேஸ்வரம் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் நடுத்தெரு, மேலத்தெரு, மேற்கு ரதவீதி, கார் பார்க்கிங் செல்லும் வழி, அக்னி தீர்த்த கடற்கரை செல்லும் வழி, ரயில்வே பீடர்ரோடு, கிழக்கு கடைத்தெரு, புதுத்தெரு, மார்க்கெட் தெரு பகுதியில் சாலையில் வாகனங்கள் சென்று வருவதில் ஏகப்பட்ட பிரச்னையும், அடிக்கடி போக்குவரத்து தடையும் ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் போதிய அளவில் போலீசார் இல்லாததால் பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

Related Stories: