பதிவுத்துறையில் பதவி உயர்வு மாவட்ட பதிவாளர் தலைமையில் ஐவர் குழு: ஐஜி சிவன் அருள் நடவடிக்கை

சென்னை: தமிழக பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: நியமன பணி வரன்முறை நாளின் அடிப்படையில் 1970 முதல் 1997-98 வரை உள்ள 2ம் நிலை சார்பதிவாளர் பட்டியல்கள், 1976 முதல் 2005-2006 வரை உள்ள முதல் நிலை சார்பதிவாளர் பட்டியல்களில் முதுநிலை நிர்ணயம் செய்யப்பட்டு ஆணைகள் வெளியிடப்பட்டும், தகுதி வாய்ந்த நபர்களுக்கு அடுத்த பதவி உயர்வான மாவட்ட பதிவாளர் பதவிக்கு பரிந்துரைத்து அரசுக்கு கருத்துருக்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த, பட்டியல்களில் தவறுதலாக விடுபட்ட நபர்களின் மேல்முறையீடுகளையும், ஒழுங்கு நடவடிக்கை மற்றும் தண்டனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நபர்களின் மேல்முறையீடுகளையும், அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கருத்துருக்கள் மீது அரசால் கோரப்பட்ட மேல் விவரங்கள் மற்றும் திருத்திய அறிக்கைகள் தொடர்பாக நிலுவையில் உள்ள கோப்புகள் மீதும், தகுதியான பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய தேர்வு நிலை குறித்தும் பரிசீலித்தும் உரிய ஆணைகள் வெளியிட குழு அமைத்திட கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த கோரிக்கையை பரிசீலிக்கப்பட்டு, இது தொடர்பாக பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு பதிவுத்துறை பயிற்சி நிலைய மாவட்ட பதிவாளர் ஆனந்தி தலைமையில் குழு அமைத்து ஆணையிடப்படுகிறது. அதில், காஞ்சிபுரம் பதிவு மாவட்ட சார்பதிவாளர் (வழிகாட்டி) மோனிகா, திண்டிவனம் பதிவு மாவட்ட  அசல் பத்திரப்பதிவு கண்காணிப்பாளர் கிரிதரன், கள்ளக்குறிச்சி பதிவு மாவட்ட உதவியாளர் சங்கர், விருதுநகர் பதிவு மாவட்ட உதவியாளர் சுபாஷ்சரோன் ஜீவித் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மேற்கண்டவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் கோப்புகளை பதிவுத்துறை தலைவரின் நேர்முக உதவியாளர் மூலமாக பதிவுத்துறை தலைவருக்கு அனுப்ப வேண்டும்….

The post பதிவுத்துறையில் பதவி உயர்வு மாவட்ட பதிவாளர் தலைமையில் ஐவர் குழு: ஐஜி சிவன் அருள் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: