எமி ஜாக்சனுக்கு கொரோனா

லண்டன்: தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கிய ‘மதராச பட்டினம்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர், பிரிட்டீஷ் நடிகை எமி ஜாக்சன். தொடர்ந்து ‘தாண்டவம்’, ‘ஐ’, ‘தங்க மகன்’, ‘கெத்து’, ‘தெறி’, ‘தேவி’, ‘2.O’ ஆகிய படங்களில் நடித்த அவர், இந்தி மற்றும் தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்தார். ஆங்கில வெப்தொடர்கள் மற்றும் ஆங்கில மேடை நாடகங்களிலும் நடித்து வருகிறார். வரும் 12ம் தேதி பொங்கலை முன்னிட்டு திரைக்கு வரும் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் இதுவரை எமி ஜாக்சன் பங்கேற்கவில்லை. இதுகுறித்து அவர் காணொலி மூலம் பேசும்போது, ‘இப்படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்த லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் டைரக்டர் விஜய்க்கு நன்றி. அருண் விஜய்யுடன் ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்தது குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். கோவையில் நடக்கும் பட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, ரசிகர்களை விரைவில் சந்திக்கிறேன்’ என்று தெரிவித்தார். ஆனால், எமி ஜாக்சனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதால், அவரால் படம் சம்பந்தமான நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை என்று ஏ.எல்.விஜய் தெரிவித்தார்.

The post எமி ஜாக்சனுக்கு கொரோனா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: