கடமலை மயிலை ஒன்றியத்தில் நலிவடைந்து வரும் செங்கல் சூளை தொழில்

வருசநாடு: தேனி மாவட்டம், கடமலை மயிலை ஒன்றியத்தில் கண்டமனூர் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, மூலக்கடை, சோலைதேவன்பட்டி, உப்புத்துறை, தங்கம்மாள்புரம் வருசநாடு, தும்மக்குண்டு, குமணன்தொழு உள்ளிட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. இங்கு தயாராகும் செங்கல், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் செங்கல் சூளைக்கு தேவையான விறகு, மணல், கரம்பை மண் ஆகியவற்றின் விலை வேகமாக உயர்ந்து வருகிறது. மேலும் வேலையாட்கள் கிடைக்கவில்லை. மூலப்பொருட்கள் விலை உயர்வு மற்றும் வேலையாட்கள் கிடைக்காததால் செங்கல் சூளை தொழில் நலிவடைந்து வருகிறது. இதன் காரணமாக செங்கல் சூளைகள் மூடப்பட்டு வருகின்றன. இது குறித்து மூலக்கடை பகுதியைச் சேர்ந்த செங்கல் சூளை உரிமையாளர் வேல் முருகன் கூறுகையில், ‘‘செங்கல் சூளை நடத்து பவர்களுக்கு வங்கிகளில் கடன் வழங்கினால், தொழிலை முறையாக நடத்த முடியும். இல்லையென்றால் செங்கல் சூளைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டு விடும். எனவே வங்கிகளில் கடனுதவி கிடைக்க, மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்….

The post கடமலை மயிலை ஒன்றியத்தில் நலிவடைந்து வரும் செங்கல் சூளை தொழில் appeared first on Dinakaran.

Related Stories: