தருமபுரம் ஆதினம் பட்டினப்பிரவேசம் நடத்துவது தொடர்பாக முதல்வர் விரைவில் நல்ல முடிவை எடுப்பார்; அமைச்சர் தகவல்: செல்வபெருந்தகை பேச்சுக்கு அதிமுக எதிர்ப்பு

எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தருமபுரம் ஆதினம் பட்டினப்பிரவேச நிகழ்வுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்த்து பேசினார். செல்வ பெருந்தகை (காங்கிரஸ்): மனிதனை மனிதன் சுமப்பது தடுக்க வேண்டும். திருஞான சம்பந்தர் பல்லாக்கில் ஏறியபோது அப்பர் எங்கே என்று கேட்டார். அப்போது பல்லாக்கு சுமந்த அப்பர், இங்கே இருக்கிறேன் என்று குரல் கொடுத்தார். உடனே திருஞான சம்பந்தர் பல்லக்கில் இருந்து இறங்கினார். நீங்கள் என் பல்லக்கை சுமக்கலாமா என்று கேட்டார். பின்னர் அவர் நான் இனி நடந்தே செல்வேன் என்று கூறினார். இவ்வாறு அவர் பேசிக்கொண்டிருந்தபோது அதிமுக எம்எல்ஏக்கள் எழுந்து நின்று ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. எஸ்.பி.வேலுமணி(அதிமுக கொறடா): உறுப்பினர் செல்வபெருந்தகை அமைச்சர் போன்று பேசுகிறார். இது சரியா? செல்வபெருந்தகை: மனிதனை மனிதனாக நடத்தும் வகையில் செயல்பட வேண்டும். இனி வரும் காலங்களில் 18 ஆதினங்களையும் அரசு கட்டுப்படுத்த வேண்டும்.ஜி.கே.மணி (பாமக): காலம் காலமாக நடக்கும் நிகழ்வு. இதற்கு தடை விதிக்க கூடாது. (இந்த நேரத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் மேஜை தட்டி ஜி.கே.மணியின் பேச்சை வரவேற்றனர்)நயினார் நாகேந்திரன் (பாஜ): செல்வ பெருந்தகை பேசும்போது, மனிதனை மனிதன் சுமக்க கூடாது என்று கூறினார். உண்மை தான். ஆனால் இங்கு தாய்-தந்தையரை மகன் சுமப்பது போன்ற ஆன்மிக நிகழ்வு.   அதுபோன்று அவர்கள் செய்கிறார்கள். அமைச்சர் பி.கே.சேகர்பாபு: ஒரு சிலர் தங்கள் செய்த தவறுகளை மறைக்க இதை அரசியலாக்க முயற்சிக்கிறார்கள். எனவே நிச்சயம் இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதாக முதல்வர் கூறியுள்ளார். இந்த பிரச்னையில் நடுநிலையோடு தூலாபாரம் போல் முதல்வர் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார். எனவே இதை அரசியல் ஆக்க வேண்டாம். ஆதீனத்துடன் பேசி அரசு ஒரு சுமுக நிலையை காணும். முதல்வருக்கு பிடித்தது எங்க தொகுதி தான்: அமைச்சர் பொன்முடி சுவாரஸ்ய பதில்பேரவையில் ராஜபாளையம் எஸ்.தங்கபாண்டியன் (திமுக) ேபசுகையில்,‘‘இந்தியாவிலேயே ஒரே ஆண்டில் 2 முறை நடந்த மானியக் கோரிக்கைகளில் 31 கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவித்த ஒரே முதல்வர் மு.க.ஸ்டாலின் தான். 234 தொகுதிகளில் முதல்வருக்கு மிகவும் பிடித்தமான தொகுதி ராஜபாளையம் தொகுதியாகும். இந்த தொகுதியில் உயர் கல்வித்துறை அமைச்சர் உயர்ந்த உள்ளத்தோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை அமைக்க இந்த ஆண்டே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். அப்போது எம்எல்ஏவின் பேச்சை பார்த்து முதல்வர் உள்ளிட்ட அனைத்து எம்எல்ஏக்களும் சிரித்தனர். இதனால், அவையில் சிரிப்பலை உருவானது.இதற்கு பதில் அளித்து அமைச்சர் பொன்முடி பேசுகையில், “முதல்வருக்கு ராஜபாளையம் தொகுதி மட்டும் கிடையாது. 234 தொகுதியும் தலைவருடைய தொகுதிதான். அவர் சொல்லித்தான் நாங்களெல்லாம் ஜெயித்து வந்திருக்கிறோம். அவருக்காக அளிக்கப்பட்ட வாக்குகள்தான். ஆகவே, அனைத்து தொகுதிகளிலும் கேட்கப்படுவது என்பது நியாயமான கோரிக்கைத்தான். அதில் தவறு கிடையாது” என்றார். …

The post தருமபுரம் ஆதினம் பட்டினப்பிரவேசம் நடத்துவது தொடர்பாக முதல்வர் விரைவில் நல்ல முடிவை எடுப்பார்; அமைச்சர் தகவல்: செல்வபெருந்தகை பேச்சுக்கு அதிமுக எதிர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: