ராஷ்மிகா, கத்ரீனா கைஃப், கஜோல் ஆகியோரை தொடர்ந்து அலியா பட்டின் வீடியோ வைரல்: ஒன்றிய அரசு உத்தரவாதம் அமலுக்கு வருமா?

 

மும்பை: முன்னணி நடிகைகள் ராஷ்மிகா, கத்ரீனா கைஃப், கஜோல் ஆகியோரைத் தொடர்ந்து மற்றொரு முன்னணி நடிகை அலியா பட்டின் ஆபாச வீடியோ வைரலாகி வருகிறது. இதுபோன்ற வீடியோக்களை தடுப்பதற்கு ஒன்றிய அரசு எப்போது புதிய சட்டம் கொண்டு வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபகாலமாக சில பாலிவுட் நடிகைகளின் ‘டீப்ஃபேக்’ (ஆபாசமாக சித்தரிக்கப்படும்) போலி வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. ஏற்கனவே ராஷ்மிகா, கத்ரீனா கைஃப், கஜோல், சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா டெண்டுல்கர், டி.வி நடிகைகள் ஜன்னத் ஜூபர், அனுஷ்கா சென் ஆகியோரின் டீப்ஃபேக் வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலமாக உருவாக்கப்படுகின்ற இதுபோன்ற போலி ஆபாச வீடியோக்களுக்கு எதிராக பிரதமர் மோடி, நடிகர்

அமிதாப் பச்சன் உள்பட பல்வேறு தரப்பினரிடம் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில், அலியா பட்டின் ஆபாச ‘டீப்ஃபேக்’ வீடியோ வைரலாகி வருகிறது. ராஷ்மிகா வீடியோவை விட இந்த வீடியோ மிகவும் ஆபாச மாக உருவாக்கப்பட்டுள்ளது. இது ‘pauseshooter’ என்ற இன்ஸ்டாகிராம் கணக்கு மூலம் பகிரப்பட்டுள்ளது. மேலும், ‘அலியா பட் என்னை கொச்சைப்படுத்துகிறார்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த கணக்கில் பெண்களின் போட்டோக்களும், வீடியோக்களும் இடம்பெற்றுள்ளன. இதுபோன்ற வீடியோக்கள் வெளியாவதை தடுக்க புது சட்டம் கொண்டு வரப்படும் என்று ஒன்றிய மின்னணு மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ஒன்றிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் கூறினர். வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ‘டீப்ஃபேக்’ வீடியோவை முற்றிலும் தடுப்பதற்கான கடும் நடவடிக்கைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post ராஷ்மிகா, கத்ரீனா கைஃப், கஜோல் ஆகியோரை தொடர்ந்து அலியா பட்டின் வீடியோ வைரல்: ஒன்றிய அரசு உத்தரவாதம் அமலுக்கு வருமா? appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: