கூத்தாண்டவர் கோயில் திருவிழா கூவாகத்தில் மிஸ் திருநங்கை அழகிப் போட்டி

விழுப்புரம்: விழுப்புரம் அருகே கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 22ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த விழாவையொட்டி நாடு முழுவதும் ஏராளமான திருநங்கைகள் விழுப்புரத்தில் குவிந்துள்ளனர். இதனிடையே, நேற்று தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், சென்னை திருநங்கைகள் அமைப்பு சார்பில், எச்ஐவி எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, நடனம் மற்றும் பரதநாட்டியம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளும், இறுதியாக மிஸ் திருநங்கை அழகிபோட்டியும் நடந்தது. சிறப்பு விருந்தினராக அமைச்சர் பொன்முடி, எம்பிக்கள் திருச்சி சிவா, ரவிக்குமார், எம்எல்ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன் மற்றும் திரைப்பிரபலங்கள் நடிகர் சூரி, நளினி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் ரவிக்குமார் எம்பி பேசுகையில், விழுப்புரத்தில் திருநங்கைகளுக்கு காப்பகமும், ஆதரவற்றவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தையும் தமிழக அரசு தொடங்க வேண்டும் என்றார். அழகிப்போட்டி முதல் சுற்றில் 30 பேர் கலந்து கொண்டனர்….

The post கூத்தாண்டவர் கோயில் திருவிழா கூவாகத்தில் மிஸ் திருநங்கை அழகிப் போட்டி appeared first on Dinakaran.

Related Stories: