உடுமலை அடுத்த திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயிலை காட்டாற்று வெள்ளம் சூழ்ந்தது

உடுமலை :  திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் பிரசித்தி பெற்ற திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு மேல் சுமார் ஒரு கிலோ மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. இதனால் தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து அருவியில் குளித்துவிட்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது கோடை வெயிலின் தாக்கத்தால் பஞ்சலிங்க அருவியில் நீர் வரத்து குறைந்து இருந்தது. இந்த நிலையில் நேற்று கன மழை பெய்தது. இதனால் பஞ்சலிங்க அருவியின் நீராதாரங்களான கொட்டையாறு, பாரப்பட்டியாறு, குருமலைஆறு, கிழவிப்பட்டி ஆறு, உப்புமண்ணபட்டி ஆறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பஞ்சலிங்க அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.நேற்று மாலை முதல் பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கரை புரண்டோடிய காட்டாற்று வெள்ளம் அமணலிங்கேஸ்வரர் கோயிலை சூழ்ந்தது. சப்தகன்னியர் சன்னதியை மூழ்கடித்த வெள்ளப்பெருக்கு அமணலிங்கேஸ்வரர் சன்னதி மட்டுமல்லாமல் முருகன்,விநாயகர் சன்னதிகளும் சூழ்ந்தது. இதனால் கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது….

The post உடுமலை அடுத்த திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயிலை காட்டாற்று வெள்ளம் சூழ்ந்தது appeared first on Dinakaran.

Related Stories: