ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கோவை வருமானவரித்துறை துணை ஆணையர் கைது: உடந்தையாக இருந்த ஆடிட்டரும் சிக்கினார்

சென்னை: கோவையில் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக வருமான வரித்துறை துணை கமிஷனர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஆடிட்டர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கோவையைச் சேர்ந்த ஒருவரது வீட்டில் 2017ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவர் நிலம் விற்பனை தொடர்பாக, வருமான வரித்துறையை ஏமாற்றியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்ந்து நிலுவையில் உள்ளது. இதனால் இந்த வழக்கை முடிக்கவும், அவருக்கு சாதகமாக நடந்து கொள்ளவும் தயாராக இருப்பதாக வருமான வரித்துறையின் துணை ஆணையர் டேனியல் ராஜ் மற்றும் ஆடிட்டர் கல்யாண் ஸ்ரீநாத் ஆகியோர் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.வழக்கை முடித்துக் கொடுப்பதற்காக ரூ.2.5 லட்சம் லஞ்சமாக கேட்டுள்ளனர். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாதவர், இது குறித்து சிபிஐயில் புகார் செய்தார். சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இந்தநிலையில் கோவையைச் சேர்ந்தவர், முதல் கட்டமாக ரூ.50 ஆயிரத்தை ஆடிட்டர் கல்யாண் ஸ்ரீநாத் மூலம், துணை ஆணையர் டேனியல் ராஜிடம் வழங்கினார். அப்போது அலுவலகத்தில் வெளியே மறைந்திருந்த சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக உள்ளே புகுந்து சோதனை நடத்தினர். துணையர் ஆணையர் டேனியல் ராஜ், ஆடிட்டர் கல்யாண் ஸ்ரீநாத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அப்போது துணை ஆணையரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில்  ரூ.5.75 லட்சம் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 2 பேரும், கோவை சிபிஐ வழக்குகளுக்கான சிறப்பு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வருகிற ஏப்ரல் 6ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்….

The post ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கோவை வருமானவரித்துறை துணை ஆணையர் கைது: உடந்தையாக இருந்த ஆடிட்டரும் சிக்கினார் appeared first on Dinakaran.

Related Stories: