திருவூரல் மகோத்சவத்தையொட்டி ஸ்ரீவைத்திய வீரராகவ பெருமாள் புட்லூர் கிராமத்திற்கு விஜயம்

திருவள்ளூர்: 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் இருந்து வைத்திய வீரராகவ பெருமாள் ஆண்டுதோறும் புட்லூர் கிராமத்திற்கு விஜயம் செய்வது வழக்கம். இது திருவூரல் மகோத்சவம் என்று அழைக்கப்படுகிறது.இந்த ஆண்டுக்கான திருவூரல் மகோத்சவம் நாளை(20ம் தேதி) நடைபெறுகிறது. இதையொட்டி, நாளை வீரராகவர் பெருமாள் கோயிலில் இருந்து உற்சவர் பெருமாள் விடியற்காலை 5 மணிக்கு புட்லூர் புறப்படுகிறார்.பின்னர் அங்கு மதியம் 1 மணிக்கு திருமஞ்சனம் நடைபெற உள்ளது.இதனைத்தொடர்ந்து இரவு 9:30 மணிக்கு புட்லூர் கிராமத்தில் திருவீதி புறப்பாடும் நடைபெற உள்ளது. பின்னர் நாளை மறுநாள்(21ம் தேதி) அதிகாலை 2 மணியளவில் புட்லூரில் இருந்து பெருமாள் திருவள்ளூர் கோயிலுக்கு திரும்புவார். இதற்கான ஏற்பாடுகளை திருவள்ளூர் வைத்திய வீரராகவர் பெருமாள் கோயில் கவுரவ ஏஜென்ட் சி.சி.சம்பத், மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.சம்பத் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்….

The post திருவூரல் மகோத்சவத்தையொட்டி ஸ்ரீவைத்திய வீரராகவ பெருமாள் புட்லூர் கிராமத்திற்கு விஜயம் appeared first on Dinakaran.

Related Stories: