ஆவடி மாநகராட்சி மேயராக ஜி.உதயகுமார் பதவி ஏற்பு: அமைச்சர் ஆவடி நாசர் வாழ்த்து

சென்னை: ஆவடி மாநகராட்சி மேயராக ஜி.உதயகுமார், துணை மேயராக எஸ்.சூரியகுமார் ஆகியோர் பதவி ஏற்றனர். ஆவடி மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயருக்கான மறைமுகத்தேர்தல் நடந்தது. இதில், மேயர் வேட்பாளர் ஜி.உதயகுமார், வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அவர் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். சான்றிதழ், செங்கோல், அங்கி உள்ளிட்டவைகளை ஆணையர் ஆர்.சரஸ்வதி வழங்கினார். அதன்பிறகு அவருக்கு, பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் உதயகுமாருக்கு திமுக செயலாளர் ஜி.ராஜேந்திரன், பேபிசேகர், ஜி.நாராயணபிரசாத், பொன்.விஜயன் மற்றும் கவுன்சிலர்கள், அதிகாரிகள் ௳ாழ்த்து தெரிவித்தனர்.ஆவடி மாநகராட்சியில் துணை மேயர் பதவி மதிமுகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. 23வது வார்டு கவுன்சிலரும், மதிமுக மாநகர செயலாளருமான எஸ்.சூரியகுமாரை துணை மேயர் வேட்பாளராக மதிமுக அறிவித்திருந்தது.  நேற்று மதியம் துணை மேயருக்கான மறைமுக தேர்தல் ஆவடி மாநகராட்சி கூட்டரங்கில் நடந்தது. துணை மேயர் வேட்பாளர் பதவிக்கு எஸ்.சூரியகுமார் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. எனவே அவர் ஒருமனதாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை மேயர் சூரியகுமாருக்கு, தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை ஆணையர் சரஸ்வதி வழங்கினார். அவர் பதவி ஏற்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். பின்னர், பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, தேர்தல் பணிக்குழு செயலாளர் ஆவடி அந்திரிதாஸ் மற்றும் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து துணை மேயர் எஸ்.சூரியகுமார் வாழ்த்து பெற்றார்….

The post ஆவடி மாநகராட்சி மேயராக ஜி.உதயகுமார் பதவி ஏற்பு: அமைச்சர் ஆவடி நாசர் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: