மாசி அமாவாசையை முன்னிட்டு வீரராகவ பெருமாள் கோயிலில் தெப்பத்திருவிழா: இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது

திருவள்ளூர்: திருவள்ளூரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத வைத்திய வீரராகவ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்று மாசி அமாவாசையை முன்னிட்டு தெப்பத் திருவிழா நடைபெற்றது. தெப்பத் திருவிழா கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழக அரசு கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுப்பு தெரிவித்து கோவில்கள் மூடப்பட்டதால் கடந்த 2 ஆண்டுகளாக தெப்பத்திருவிழா நடைபெறாமல் இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நேற்று தெப்பத் திருவிழா நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது கோயில் அருகே உள்ள திருக்குளத்தில் வண்ண வண்ண மலர்களாலும், மின் விளக்குகளால் அலங்கரித்து தயார் நிலையில் இருந்த தெப்பலில் ஸ்ரீதேவி பூதேவியுடன் வீரராக பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் தெப்பல் கோவில் குளத்தை மூன்று முறை வலம் வந்தது. இதனை திருவள்ளூர், அரக்கோணம், பூந்தமல்லி, கடம்பத்தூர், பேரம்பாக்கம், மணவாளநகர், திருமழிசை, வெள்ளவேடு என சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கண்டுகளித்தனர். தெப்பத் திருவிழா நேற்று தொடங்கியது. இன்று (3 ம் தேதி), நாளை (4 ஆம் தேதி) இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இங்க தெப்பத்திரு விழாற்கான ஏற்பாடுகளை கோயில் கௌரவ ஏஜென்ட் சி.சி.சம்பத், மக்கள் தொடர்பு அலுவலர் சம்பத் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்….

The post மாசி அமாவாசையை முன்னிட்டு வீரராகவ பெருமாள் கோயிலில் தெப்பத்திருவிழா: இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது appeared first on Dinakaran.

Related Stories: