கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்ய தகுதியானவர்களிடம் வட்டி செலுத்த வலியுறுத்தும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் ஐ.பெரியசாமி எச்சரிக்கை

சென்னை: கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்ய தகுதியானவர்களிடம் வட்டி செலுத்த வலியுறுத்தும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.சென்னை தலைமை செயலகத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:கூட்டுறவு சங்கங்களில் நகை கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்களுக்கான இறுதி பட்டியல் ஒரு வாரத்தில் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.பயனாளிகள் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் பட்டியல் வெளியிடப்பட்டவுடன் அந்தந்த கூட்டுறவு சங்கங்களின் தகவல் பலகையில் ஒட்டப்படும்.2021ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி வரை உள்ள நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு பின் தற்போது வரை அந்த நகைகளுக்கு செலுத்த வேண்டிய வட்டியை அரசே செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்களிடம் வட்டி செலுத்த வலியுறுத்தும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுவரை 13 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் நகை கடன் தள்ளுபடி செய்ய தகுதியானவர்களாக கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்க கூடிய பட்சத்தில் ஆய்வு செய்து அவர்களுக்கான நகை கடன் தள்ளுபடி செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்….

The post கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்ய தகுதியானவர்களிடம் வட்டி செலுத்த வலியுறுத்தும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் ஐ.பெரியசாமி எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: