வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மாநகராட்சி உட்பட அனைத்து இடங்களிலும் திமுக அமோக வெற்றி-3வது இடத்திற்கு சென்ற அதிமுக வேட்பாளர்கள்

வேலூர் : வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி உட்பட அனைத்து இடங்களிலும் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக வேட்பாளர்கள் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டனர். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. அதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணியளவில் தொடங்கியது. அதன்படி வேலூர் மாநகராட்சியில் 60 வார்டுகள், குடியாத்தம் நகராட்சியில் 36 வார்டுகள், பேரணாம்பட்டு நகராட்சியில் 21 வார்டுகள், பள்ளிகொண்டா பேரூராட்சியில் 18 வார்டுகள், ஒடுகத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகள், பென்னாத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகள், திருவலம் பேரூராட்சியில் 15 வார்டுகள் என மொத்தம் 180 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28ம் தேதி தொடங்கி கடந்த 4ம் தேதி முடிவடைந்தது. வேலூர் மாநகராட்சியில் 2 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து 178 வார்டுகளுக்கு தேர்தல் நடந்தது. நேற்று காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் இருந்தே திமுக முன்னிலை பெற்று வெற்றி பெற்றது. வேலூர் மாநகராட்சியில் 60 வார்டுகளில் 45 வார்டுகளில் திமுக கூட்டணியும், 7 வார்டுகளில் அதிமுக கவுன்சிலர்களும், பாமக, பிஜேபி என தலா ஒரு வார்டில் வெற்றி பெற்றுள்ளனர். 6 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். குடியாத்தம் நகராட்சியில் 36 வார்டுகளில் 23 வார்டுகளில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதிமுக 9 வார்டுகளிலும், புரட்சி பாரதம், பிஜேபி தலா ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றனர். பேர்ணாம்பட்டு நகராட்சியில் 21 வார்டுகளில் திமுக கூட்டணி 17 வார்டுகளில் வெற்றி பெற்றது. 4 வார்டுகளில் சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி இல்லாமல் படுதோல்வி அடைந்துள்ளது.  திருவலம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 9 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றது. அதிமுக 5 இடங்களிலும், சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. பள்ளிகொண்டாவில் 18 வார்டுகளில் 14 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றது. சுயேச்சை 2 இடங்களிலும், அதிமுக, அமமுக என தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. ஒடுக்கத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 13 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றது. 2 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது. பென்னாத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 8 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றது. 5 இடங்களில் பாமகவும், 2 இடங்களில் அதிமுகவும் வெற்றி பெற்றது. வேலூர் மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக பல வார்டுகளில் சொற்ப வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளதுடன் 3வது இடத்திற்கு சென்று டெபாசிட் இழந்துள்ளது. இது அதிமுக தொண்டர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது….

The post வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மாநகராட்சி உட்பட அனைத்து இடங்களிலும் திமுக அமோக வெற்றி-3வது இடத்திற்கு சென்ற அதிமுக வேட்பாளர்கள் appeared first on Dinakaran.

Related Stories: