பிஎம் என்பதன் அர்த்தம் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ்: அகிலேஷ் பிரசாரம்

ஹார்டோய்: உபி சண்டிலா தொகுதி ஹர்டோயில் நேற்று நடந்த பேரணியில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டு பேசுகையில், ‘‘நகர மக்களுக்கு பி.எம் என்றால் என்ன என்று தெரியும். பி.எம் என்றால் பேக்கர்ஸ் மற்றும்  மூவர்ஸ் தயாராக உள்ளது என்றுதான் புரியும். பொதுமக்கள் மத்தியில் தனக்கு எதிராக 440 வோல்ட் மின்னோட்டம் இருப்பதை பாஜ புரிந்து கொள்ளவில்லை. இந்த முறை பாஜவுக்கும் மாநில மக்களுக்கும் இடையே நேரடிப் போட்டி  நிலவுகிறது. பாஜவுடன் நேரடியாகப் போராடும் மக்களுடன் நாங்கள் இருக்கிறோம்.பகுஜன் சமாஜ் கட்சியோ அல்லது காங்கிரஸோ அடுத்த ஆட்சியை அமைக்க போவதில்லை.  உங்கள் வாக்குகளை வீணாக்காதீர்கள். அடுத்த அரசாங்கத்தை சமாஜ்வாடி அமைப்பதை  உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஆதித்யநாத்தை தான் ‘பாபா முதல்வர்’ என்று அழைக்கிறேன். ஆனால் ஒரு நாளிதழ் அவரை ‘புல்டோசர் பாபா’ என்று பெயரிட்டுள்ளது,’ என்று விமர்சித்திருந்தார்….

The post பிஎம் என்பதன் அர்த்தம் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ்: அகிலேஷ் பிரசாரம் appeared first on Dinakaran.

Related Stories: