கொல்கத்தாவில் இன்று 2வது டி.20 போட்டி : தொடர்ச்சியாக 6வது தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா: பதிலடி கொடுக்க வெ.இண்டீஸ் ஆயத்தம்

கொல்கத்தா: இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையே 3 போட்டி கொண்ட டி.20 தொடர் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நடந்த முதல் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் இன்று இரவு 7 மணிக்கு 2வது டி.20 போட்டி தொடங்கி நடக்கிறது. இந்த ஆட்டத்தில் இந்தியா எந்தவித மாற்றமும் இன்றி களம் இறங்கலாம். ஒருவேளை இஷான்கிஷனுக்கு பதில் ருதுராஜ், தீபக் சாகருக்கு பதில் ஷர்துல்தாகூர் சேர்க்கப்படலாம். இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா களம் இறங்குகிறது.மறுபுறம் வெஸ்ட்இண்டீஸ் அணியில் அதிரடி வீரர்கள் இருந்தும் யாரும் பார்மில் இல்லை. நிகோலஸ்பூரன் மட்டும் முதல்போட்டியில் அரைசதம் அடித்தார். மற்றவீரர்கள் ரன் அடிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் களம் இறங்குவது கூடுதல் பலம். முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கவேண்டிய நெருக்கடியில் அந்த அணி களம் இறங்குகிறது. இந்திய அணி சொந்த மண்ணில் கடந்த 2019ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி.20 தொடரை இழந்தது. அதன்பின்னர் வங்கதேசம், வெஸ்ட்இண்டீஸ், இலங்கை, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக டி.20 தொடர்களை கைப்பற்றி உள்ளது. இன்று தொடர்ச்சியாக 6வது தொடரை கைப்பற்றும் எதிர்பார்ப்பில் உள்ளது….

The post கொல்கத்தாவில் இன்று 2வது டி.20 போட்டி : தொடர்ச்சியாக 6வது தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா: பதிலடி கொடுக்க வெ.இண்டீஸ் ஆயத்தம் appeared first on Dinakaran.

Related Stories: