உபி, பஞ்சாபில் தாக்குதல் அச்சுறுத்தல் 24 பாஜ தலைவர்களுக்கு ஒன்றிய அரசு பாதுகாப்பு

புதுடெல்லி: உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் கர்ஹால் தொகுதியில் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாஜ சார்பில் ஒன்றிய சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் சத்யபால் சிங் பாகல் போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் மாலை இவர், மெயின்புரி மாவட்டம், அத்திகுல்லாபூர் கிராமம் அருகே பிரசாரத்திற்கு சென்றபோது, கார் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதேபோல், மற்றொரு சம்பவத்தில் பாஜ எம்பி கீதா ஷக்யாவும் தாக்கப்பட்டார். இந்நிலையில், உத்தர பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் பாஜ வேட்பாளர்கள், பாஜ தலைவர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட 24 பேருக்கு ஒன்றிய துணை ராணுவ கமாண்டோக்களின் விஐபி பாதுகாப்பை ஒன்றிய அரசு வழங்கி உள்ளது. இதில், சத்யபால் சிங்குக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சிலருக்கு மாநில போலீஸ் பாதுகாப்புடன் ஒன்றிய அரசின் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. சிலருக்கு ஒன்றிய தொழில் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எப்) மற்றும் ஒன்றிய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்) பாதுகாப்பும், மேலும் சிலருக்கு தேர்தல் முடியும் வரையில் ஒய், ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது….

The post உபி, பஞ்சாபில் தாக்குதல் அச்சுறுத்தல் 24 பாஜ தலைவர்களுக்கு ஒன்றிய அரசு பாதுகாப்பு appeared first on Dinakaran.

Related Stories: