முல்லை பெரியாறுக்கு தனி நிர்வாக இன்ஜி. – கேரள அரசு நடவடிக்கை

திருவனந்தபுரம்: ‘முல்லைப் பெரியாறு அணைக்கு என கேரள அரசின் சார்பில் தனி நிர்வாக பொறியாளர் நியமிக்கப்படுவார்,’ என சட்டப்பேரவையில் கேரள நீர்ப்பாசனத் துறை  அமைச்சர் ரோஷி அகஸ்டின் சமீபத்தில் அறிவித்்தார். இதன் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக, திருவனந்தபுரத்தில் ரோஷி அகஸ்டின் நேற்று அளித்த பேட்டி வருமாறு: மழைக்  காலங்களில் முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் உயரும் போது, கேரளாவால் உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை. அணையின் நீர்மட்டம்,  பாதுகாப்பு உள்ளிட்ட விவரங்களுக்காக தமிழ்நாட்டைத் தான் அணுக வேண்டிய நிலை  இருக்கிறது. இது, கேரளாவுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை  கட்டப்பனை மைனர் நீர்ப்பாசன நிர்வாக பொறியாளர்தான் முல்லைப் பெரியாறு  அணையையும் கவனித்து வந்தார். தற்போது, இந்த அணைக்காக தனி நிர்வாக பொறியாளரை நியமிக்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இவருக்காக தேக்கடியிலோ அல்லது முல்லை பெரியாறு அணைக்கு அருகிலோ அலுவலகம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்….

The post முல்லை பெரியாறுக்கு தனி நிர்வாக இன்ஜி. – கேரள அரசு நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: