ஏன் ஹெல்மெட் அணியவில்லை என கேட்டதால் பத்திரிக்கையாளரை வெளுத்த போலீசார்

கவுகாத்தி: அசாம் மாநிலத்தின் சிராக் மாவட்டத்தை சேர்ந்தவர் பத்திரிக்கையாளர் ஜெயந்தா தேப்நாத். பசுகான் மாவட்டத்தில் நேற்று முன்தினம் போலீசார் இருவர் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இதனை பார்த்த ஜெயந்தா, அவர்களிடம் ஹெல்மெட் அணியாதது குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார். போலீசாரே ஹெல்மெட் அணியாமல் செல்லும்போது  பொதுமக்கள் மட்டும் எப்படி போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த போலீசார் இருவரும், ஜெயந்தாவை நடுரோட்டில் தாறுமாறாக தாக்கியுள்ளனர். அவர் தான் ஒரு பத்திரிக்கையாளர் என்று கூறிய பிறகும் இருவரும் அவரை விடவில்லை. போலீசார் தாக்கியதால் பாதிக்கப்பட்ட ஜெயந்தா, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஜெயந்தாவை போலீசார் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதனை தொடர்ந்து சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்தள்ள அசாம் போலீசார் சம்பந்தப்பட்ட 2 போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்….

The post ஏன் ஹெல்மெட் அணியவில்லை என கேட்டதால் பத்திரிக்கையாளரை வெளுத்த போலீசார் appeared first on Dinakaran.

Related Stories: