ஆணவக் கொலை செய்யப்பட்ட ஐடி ஊழியரின் பெற்றோருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

நெல்லை: தூத்துக்குடி மாவட்டம், பிரையண்ட் நகரைச் சேர்ந்த சந்திரசேகர், தமிழ்ச்செல்வியின் மூத்த மகன் ஐடி ஊழியர் கவின் செல்வகணேஷ் (27), காதல் விவகாரத்தில் கடந்த 27ம் தேதி நெல்லை கேடிசி நகரில் ஆணவக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பாளை போலீசார் வழக்கு பதிந்து அவரது காதலியான சுபாஷினி தம்பி சுர்ஜித்தையும், தந்தை எஸ்ஐ சரவணனையும் கைது செய்தனர். கவின் தந்தை சந்திரசேகர், இன்ஸ்பெக்டர் காசிப்பாண்டியன் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறினார்.

இந்நிலையில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என அரசியல் கட்சி தலைவர்கள், சமூக அமைப்புகள் அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அரசை வலியுறுத்தினர். இதையடுத்து ஏரல் ஆறுமுகமங்கலத்தில் உள்ள சந்திரசேகர் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

The post ஆணவக் கொலை செய்யப்பட்ட ஐடி ஊழியரின் பெற்றோருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு appeared first on Dinakaran.

Related Stories: