மக்கள் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் மின் இயக்க வாகனத்தின் அடையாள வடிவமைப்பு மற்றும் காட்சிப்படம் உருவாக்கும் போட்டியை அறிவித்துள்ளது. இந்த போட்டிக்கான பதிவு கட்டணம் இலவசம். இதற்கான அறிவிப்பு ஜூலை 29ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த அறிவுப்பு தொடர்பான இணையவழி வழிகாட்டி ஆகஸ்ட் 4ம் தேதி (நாளை) தொடங்கி, ஆகஸ்ட் 22ம் தேதி வரையிலும் சமர்ப்பிக்கலாம். இப்போட்டியின் முடிவுகள் செப்டம்பர் 4ம் தேதி அறிவிக்கப்படுகிறது. வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2ம் பரிசாக ரூ.30 ஆயிரம், 3ம் பரிசாக ரூ.20 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியின் தேர்வு குழுவினராக தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழக மேலாண்மை இயக்குநர் அனீஷ் சேகர், பிராண்டிங் வடிவமைப்பாளர் பவித்ரா (ஐ.டி.டி.பி), இந்தியாவின் மூத்த தகவல் தொடர்பு நிறுவனர் வர்ஷா (மெட்ராஸ்டர்ஸ்), அமைப்பின் தலைவர் வினோத்குமார் (யூ.ஐ.) வடிவமைப்பாளர் நிர்மல் சீதல் மற்றும் நகரமைப்பு நிபுணர் வித்யா மோகன் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் விவரங்களுக்கு https://www.tngecl.org/static/greenenergy/evrevolution.html என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.
The post தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் நடத்தும் மாநில மின் இயக்க வாகன திட்டத்தின் பிராண்டிங் போட்டி: வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு appeared first on Dinakaran.
