அரியலூரில் மரக்கன்று நடும் பணியில் நெடுஞ்சாலைதுறை மும்முரம்

 

அரியலூர், ஆக.3: அரியலூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் மூலம் மரக்கன்றுகள் நடும் பணியை கண்காணிப்பு பொறியாளர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார். அரியலூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை மூலம் 7,500 மரக்கன்று நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் செந்தில்குமார் நேற்று பொய்யூர் சுண்டகுடி சாலையினை ஆய்வு செய்து 200 மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தார். இந்த மரக்கன்றுகள் 8 அடி உயரத்திற்கும் 20 அடி இடைவெளியுடனும் சாலை ஓரத்தில் நடப்பட்டது.

மேலும், நடக்கூடிய மரங்களில் புங்கன்,வேம்பு, புளி போன்ற நாட்டு மரங்களை தேர்வு செய்யவும், அவர்களை முறையாக பராமரிக்கவும் கண்காணிப்பு பொறியாளர் அறிவுரை கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கோட்டப் பொறியாளர் வடிவேல், உதவி கோட்ட பொறியாளர் நடராஜன், உதவி பொறியாளர் இளைய பிரபு ராஜன், சாலை ஆய்வாளர் மற்றும் சாலை பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: